தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியபார கடைகளுக்கு தடை.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகளம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. வெளிமாநிலங்கள் மற்றும வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி. திருமண விழாவில் அதிகபட்சமாக 100 பேர் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி.
பூங்காவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மால்கள், பெரிய வணிக வாளகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்ப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Lockdown