திருச்சியில் ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சியில் செயல்பட்டுவந்த தனியார் கொரோனா பரிசோதனை மையம் சீல் வைக்கப்பட்டிருப்பதோடு அதற்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மாவட்ட ஆட்சியர் சிவராசு
  • Share this:
திருச்சி உறையூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்த தனியார் பரிசோதனை மையத்திற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தததால் கடந்த வாரம் பரிசோதனை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

இந்நிலையில், தற்போது மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டதாக கூறி இப்பரிசோதனை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அப்பரிசோதனை மையத்திற்கான உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading