தமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.. உயிரிழப்பு 29

தமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.. உயிரிழப்பு 29

கொரோனா

சென்னையில் அதிகபட்சமாக 2558 பேருக்கு கொரோனாவால் பாதித்து உள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7987 பேருக்கு புதிதாக கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 4176 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வௌயிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 7987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2558 பேருக்கு கொரோனாவால் பாதித்து உள்ளனர்.

    சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 685 பேரும், கோவையில் 534 பேரும், திருவள்ளூரில் 473 பேருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,62,935 பேர் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்று குணமடைந்து 4176 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில் 8,91,839 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு தற்போது 58,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 29 பேர் உயிரிழந்துள்ள மொத்த கொரோனா பாதிப்பு 12,999 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Vijay R
    First published: