Home /News /coronavirus-latest-news /

விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கொரோனா சோதனை...!

விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கொரோனா சோதனை...!

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

”தமிழகத்தில், மருத்துவ பொருட்கள் தட்டுபாட்டு இல்லாமல் தராளமாக கிடைக்கிறது”

டெல்லியில் இருந்து சென்னை பன்னாட்டு முனையத்திற்கு வந்த என்னையும் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்று சோதனை செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது,” கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் இருக்கும் போது, பெட்ரோல் விலையை உயர்த்துவதும் குறையும் போது அதன் விலை குறைப்பதுமாக உள்ளது. பெட்ரோல் விலை மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று நினைக்கிறேன்” என்றார்.

அதன் பின்னர், கொரோனா வைரஸை கட்டுபடுத்த  சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில், மருத்துவ பொருட்கள் தட்டுபாட்டு இல்லாமல் தராளமாக கிடைக்கிறது. மேலும் டெல்லியில் இருந்து பன்னாட்டு முனையத்திற்கு நான் வந்தவுடன், என்னையும் கொரோனா உள்ளதா? என சோதனை செய்தனர்” என்றும் கூறினார்.

Also see...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai Airport, CoronaVirus, Minister Jayakumar

அடுத்த செய்தி