கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடம்... உயிரிழப்பு மிகக்குறைவு...! கணக்கீட்டை எப்படி மேற்கொள்கிறது ரஷ்யா?

"கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புகளும், கொரோனா உயிரிழப்பாக கருதப்படுவதில்லை"

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடம்... உயிரிழப்பு மிகக்குறைவு...! கணக்கீட்டை எப்படி மேற்கொள்கிறது ரஷ்யா?
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-வது நாடாக உள்ள ரஷ்யாவில், உயிரிழப்பு விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா மரணங்களை ரஷ்யா மறைக்கிறதா? உயிரிழப்பு கணக்கீட்டை எப்படி மேற்கொள்கிறது ரஷ்யா?

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. ரஷ்யாவில் தொடர்ந்து 11 நாட்களாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில் மே 17-ம் தேதி ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,709 ஆக இருந்தது.

இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை சற்றே குறைந்து 8,926 புதிய தொற்றுகள் ஒரேநாளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 268 ஆக இருந்த மொத்த பாதிப்பு, அடுத்த 14 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்து 2 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது.


உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் பாதிப்புகள் கடுமையாக உள்ள போதும், உயிரிழப்பு விகிதம் வேறெங்கும் இல்லாத வகையில் குறைவாகவே காணப்படுகிறது. உலகம் முழுவதும் உயிரிழப்பு விகிதம் 6 . 6 விழுக்காடாகவும், அமெரிக்காவில் 6 விழுக்காடாகவும் காணப்படுகிறது.

ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் நாடுகளில் உயிரிழப்பு விகிதம் 14 விழுக்காடாக உள்ளது. ஆனால் ரஷ்யாவின் உயிரிழப்பு விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. ரஷ்யா உயிரிழப்புகளை மறைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 60 விழுக்காட்டினருக்கு, ஏற்கனவே பல்வேறு மோசமான நோய் தாக்கம் இருந்ததாகவும், எனவே அவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட அனைத்து உயிரிழப்புகளும், கொரோனா உயிரிழப்பாக கருதப்படுவதில்லை. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் ஒருவர், மாரடைப்பால் உயிரிழக்க நேர்ந்தால், அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணமாக பதிவு செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் உலகில் அதிகளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நாடாக ரஷ்யா உள்ளது. இதுவரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதகாவும் அதிக பரிசோதனைகளின் காரணமாகவே, பாதிப்புகள் அதிகமாக உறுதி செய்யப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Also see...

 
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading