கொரோனா: தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

கொரோனா: தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
மாதிரிபடம்
  • Share this:
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

கொரோனா தொற்று பரவும் இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே வெளியில் செல்வது என்பதை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு விருந்தினர்களை அழைப்பதையோ அல்லது விருந்தினராக செல்வதையோ தவிர்க்கலாம். கூடுமானவரை விழாக்கள், நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். தவிர்க்க முடியாதெனில் அதிக கூட்டமில்லாமல் விழாக்களை எளிமையாக நடத்துவது நல்லது.


இதேபோல் முடிந்தவரை, பொதுப்போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணம் எனில் பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை. பேருந்து பயணத்தின் போது மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கலாம்.

கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் தற்காப்பு முறைகளில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் முக்கியமானது. கொரோனா தொடுதல் மூலமே அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்பதால் கை குலுக்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம். நிர்பந்தம் ஏற்பட்டால் ஹேண்ட் சானிடைஸர்களை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதைக் கூட நிறுத்தி வைப்பது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் பல இடங்களில் இருந்து பல நபர்கள் மூலம் டெலிவரும் செய்யப்படும் என்பதால் அதை தவிர்த்தல் நலம். தவிர்க்க முடியாத பட்சத்தில், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால், அதை பிரித்து பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, கைகளை நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடலாம்.கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பகுதிகளுக்கு பயணிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading