தமிழகத்தில் 3 மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா... இன்றைய பாதிப்பு நிலவரம்

மாதிரி படம்

CoronaVirus | தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது.

 • Share this:
  சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31,223 பேர் குணமடைந்துள்ள நிலையில் 478 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி கொரோனா உயிரிழப்பு 450-க்கு மேல் பதிவாகி வருவது மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17,70,503 ஆக உள்ள நிலையில் கொரோனாவினால் இதுவரை 24,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

  சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் புதிதாக 2596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் 3488 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1742 பேரும், திருப்பூரில் 1373 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கோவயைில் அதிகபட்சமாக 39194 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த 3 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  Published by:Vijay R
  First published: