• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,000-க்கும் கீழ் குறைவு... உயிரிழப்பும் வெகுவாக குறைந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,000-க்கும் கீழ் குறைவு... உயிரிழப்பும் வெகுவாக குறைந்தது

மாதிரி படம்

மாதிரி படம்

CoronaVius Update | கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 351 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 27,356  ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 19448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31360 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681  ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 31,360 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,97,299 ஆக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது. தற்போது கொரோனா உயிரிழப்பு 400-க்கும் கீழ் பதிவாகி உள்ளது மக்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 351 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 27,356  ஆக அதிகரித்துள்ளது.

    கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2564 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1530 பேருக்கு கொரோனா தொற்றும், 40 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: