தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும், கடந்த இரண்டு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,73,724 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 15,108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 27,463 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,48,352 ஆக உள்ளது.
கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் 400-க்குதம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்த உள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில் பேர் 374 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 29,280 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1,982 பேருக்கும், சென்னையில் 989 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.