கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதுதான் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உலக சுகாதார அமைப்பு..!

மரபணுத் தொடரை ஆராய்ந்த உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அது இயற்கையாக உருவானது என்று உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதுதான் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உலக சுகாதார அமைப்பு..!
உலக சுகாதார நிறுவனம்.
  • Share this:
கொரோனா உருவானது பற்றி நீண்ட நாட்களாக சர்ச்சை நிலவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதுதான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊஹானில் உள்ள உயிரி ஆய்வுக்கூடத்தில் உருவானது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் மரபணுத் தொடரை ஆராய்ந்த உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அது இயற்கையாக உருவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான், விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக் காரணமான இடை உயிரினம் குறித்த தகவல் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

Also see:
First published: May 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading