உயர்நீதிமன்றத்தில் நாளை முதல் அவசர வழக்குகள் மட்டும் விசாரணை!

வழக்கறிஞர்கள் உணவகம் ஆகியவை நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நாளை முதல் அவசர வழக்குகள் மட்டும் விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம்
  • Share this:
சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் மூத்த நீதிபதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, உயர்நீதிமன்றத்தில் நாளை முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாளை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்தார். அது குறித்த முடிவை இன்று அறிவிப்பார் என தெரிகிறது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பது, தெர்மல் ஸ்கிரீனர் கருவி மூலம் நீதிமன்றங்களுக்கு வருபவர்களை பரிசோதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், வழக்கறிஞர்கள் உணவகம் ஆகியவை நாளை
முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading