கொரோனா டெல்டா வகை வைரஸ் அமெரிக்காவில் மீண்டும் வெகுவேகமாக பரவி வருகிறது, இதனையடுத்து மரணங்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இப்போது நாளொன்றுக்கு 1 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்றி வருகிறது, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக புள்ளி விவரங்களின் படி ஜனவரியில் 2,50,000 ஆக இருந்த தினசரி எண்ணிக்கை பிறகு குறைந்தாலும் இன்றைய தேதியில் மீண்டும் 1 லட்சம் பேருக்கு தினசரி கொரோனா தொற்றுவது அங்கு கவலையை அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் சராசரி நாளொன்றுக்கு 11,000 ஆக குறைந்த தினசரி பாதிப்பு இப்போது ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் இது தொடர்பாக எச்சரித்த போது, தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் இல்லையெனில் இன்னும் மோசமான சூழ்நிலை ஏற்படும் என்கிறார். அப்படி தடுப்பூசிகளை விரைவு படுத்தவில்லை எனில் ஜனவரி போல் அலை அலையாக கொரோனா பாதிப்பு ஏற்படும் என்கிறார் அவர்.
அமெரிக்க மக்கள் தொகையில் 50% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வாக்சின் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதிவேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா ஆபத்தாக இருந்து வருகிறது.
புளொரிடாவில் மட்டும் இந்த புதிய கொரோனா பாதிப்பில் 20% பங்களிப்பு செய்துள்ளது.
அதே போல் ஒரு மாதத்தில் அமெரிக்காவில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஜூலை இறுதிவாக்கில் 43,000 பேர் அமெரிக்காவில் கொரோனாவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளோரிடாவை அடுத்து டெக்ஸாசிலும் வெகு வேகமாகப் பரவி வருகிறது. புளோரிடா, டெக்சாஸ், மிசவ்ரி, அர்கன்சாஸ், லூசியானா, அலபாமா, மற்றும் மிசிசிபி மாகாணங்களில் கோவிட் அதிகரித்து வருகிறது. ஹூஸ்டனில் 11 மாதக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கி 150 மைல்களுக்கு அப்பால் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2 வாரங்களுக்கு முன்பு 270 ஆக இருந்த கொரோனா மரண் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை முதல் தினசரி 500 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Corona, COVID-19 Second Wave