கொரானா அச்சுறுத்தல் - மதுரையில் இருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து

மதுரை விமான நிலையம்

”தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் இலங்கை சென்று அங்கிருந்து மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்”

 • Share this:
  கொரானா வைரஸ் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் வாரத்தில் மூன்று நாட்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இலங்கையிலிருந்து காலை 9 மணிக்கு மணிக்கு மதுரை வந்து பின் 10.15 மணிக்கு இலங்கை புறப்பட்டு செல்லும்.

  இந்த விமானத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் இலங்கை சென்று அங்கிருந்து மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

  அதேபோல பிற நாட்டிலிருந்து வருபவர்களும் இலங்கை வழியாக இதே விமானத்தில் மதுரை வந்து சென்றனர். இந்த நிலையில் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மார்ச் 17-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை காலை நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதேசமயம் இலங்கையில் இருந்து வாரத்திற்கு 4 நாட்கள் மாலை 3 மணிக்கு மதுரை வந்து 4 மணிக்கு இலங்கை செல்லும் சேவையானது தொடரும் என அறிவிக்கப்பட்டு சேவைகளை குறைப்பதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

  கொரோனாவை அச்சம் தவிர்த்து எதிர்கொள்வோம் - சார்க் நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மோடி பேச்சு 

  வைரல் ஆடியோ... நிர்மலா சீதாராமனுக்கு SBI அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see...
  Published by:Vaijayanthi S
  First published: