மக்கள் ஊரடங்கு... சக நடிகர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு..!

மோடியின் அறிவிப்புக்கு பல மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஊரடங்கு... சக நடிகர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு..!
கமல்ஹாசன்
  • Share this:
பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்கில் தனது ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதனைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஞாயிறன்று மக்களே ஊரடங்கு நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மோடியின் அறவிப்புக்கு பல மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு தனது ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், இசை அமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத் என திரையுலக நண்பர்கள் பலரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் இந்த அசாதாரன சூழலை எதிர்கொள்ள 22-ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனைவரும் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.Also see...
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading