• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Corona Vaccine | கொரோனா தடுப்பூசிக் கொள்முதலில் இந்தியா தாமதம்: வைராலஜிஸ்ட் கருத்து

Corona Vaccine | கொரோனா தடுப்பூசிக் கொள்முதலில் இந்தியா தாமதம்: வைராலஜிஸ்ட் கருத்து

தடுப்பூசி.

தடுப்பூசி.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நவம்பர் இறுதியிலேயே 700 மில்லியன் டோஸ்களுக்கு முன் கூட்டியே ஆர்டர் செய்திருந்தன. அந்த நிலையில் அந்த தடுப்பூசிகள் சோதனை நிலையில்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    மற்ற நாடுகள் தடுப்பூசிக்கான கொள்முதல்களுக்காக முந்திக் கொண்ட நிலையில் இந்தியா பெரிய அளவில் தடுப்பூசிக் கொள்முதல் செய்வதை தாமதித்தது என்று வைரஸ் ஆய்வு நிபுணர் ககன் தீப் காங் தெரிவித்துள்ளார்.

    உதாரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே அமெரிக்கா, முக்கிய தடுப்பூசிகள் முழுதும் தயாராகாத நிலையிலேயே 10 பில்லியன் டாலர்கள் தடுப்பூசிக்காக முதலீடு செய்ததாக டாக்டர் காங் கூறுகிறார்.

    “நாம் தடுப்பூசி ஆர்டர்கள் அட்டவணையில் கொஞ்சம் பின் தங்கி விட்டோமோ? உலகின் மற்ற நாடுகள் ஓராண்டுக்கு வாக்சின் வாங்கியுள்ளது. இப்போது எந்த தடுப்பூசி சந்தையில் கிடைக்கிறது, நாம் போய் எங்களுக்கு வாக்சின் கொடுங்கள் என்று ஆர்டர் செய்ய?

    ஜைடஸ் கெடில்லா, பயலாஜிக்கல்-இ, உட்பட வாக்சின் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களிடமும் வேகமாக உற்பத்தி செய்யக் கோர வேண்டும், உற்பத்தியைப் பெருக்கக் கோர வேண்டும். இப்போது இவர்கள் தயார் செய்யும் வேகத்தின் படி இந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் நமக்கு தடுப்பூசி கிடைக்கும் எனவே எவ்வளவு விரைவில் எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்ய முடியுமோ செய்ய வேண்டும். உங்கள் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தது என்றால் உங்களது தடுப்பூசிகள் அனைத்தையும் எடுத்து கொள்கிறோம், என்று கூறி டோஸ்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.” என்றார்.

    கொரோனா தடுப்பூசி கொள்முதலில் இந்தியாவின் நடைமுறைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த மார்ச்சிலேயே ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கா 10 பில்லியன் டாலர்கள் கொரோனா தடுப்பூசியில் முதலீடு செய்துள்ளது. மாறாக இந்தியா பெரிய கொள்முதலில் நாட்டம் செலுத்தவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மாறாக முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களுக்காக சிறு சிறு தடுப்பூசிக் கொள்முதல்களை மட்டுமே இந்தியா செய்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    சீரம் இன்ஸ்டிட்யூட் 11 மில்லியன் டோஸ்களையும் பாரத் பயோ டெக் 5.5 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களையும் முதல் கட்டத்தில் வழங்கின. முதல் கட்ட வாக்சின் நடவடிக்கைகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில் கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

    மாறாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நவம்பர் இறுதியிலேயே 700 மில்லியன் டோஸ்களுக்கு முன் கூட்டியே ஆர்டர் செய்திருந்தன. அந்த நிலையில் அந்த தடுப்பூசிகள் சோதனை நிலையில்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: