• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56-இல் இருந்து 68-ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 735 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2, 804-ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56-இல் இருந்து 68-ஆக உயர்ந்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் 26 பேரும், குஜராத்தில் 8 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

    கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 735 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,301ல் இருந்து 2,804-ஆக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் 490 பேரையும், தமிழ்நாட்டில் 411 பேரையும், டெல்லியில் 335 பேரையும் கொரோனா பாதித்துள்ளது.

    அடுத்தப்படியாக கேரளாவில் 286 பேரும், உத்தரபிரதேசத்தில் 285 பேரும், ராஜஸ்தானில் 167 பேரும், தெலங்கானாவில் 158 பேரும், ஆந்திராவில் 132 பேரும் கொரோனாவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சிகிச்சை பெற்றவர்களில் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 157-இல் இருந்து 162-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: