கொரோனா தாக்கத்தால் ஒரே நாளில் 78 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த கோடீஸ்வரர்கள்..!

பங்குச் சந்தை சரிவின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் ஒரே நாளில் 78 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த கோடீஸ்வரர்கள்..!
  • Share this:
கொரோனா வைரஸ் பீதியால், உலக பங்குச் சந்தைகள் சரிந்ததால் ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலக கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 78 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதியால், பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள், 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் இழப்பை சந்தித்தன.

இதன் தொடர்ச்சியாக உலக கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 78 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளனர். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்தார். இதேபோல் French luxury conglomerate தலைவர் பெர்னாடு அர்னால்ட், 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார். உலகின் மூன்றாவது பணக்காரரான பெர்னாடு அர்னால்டின் LVMH நிறுவன பங்குகள் 9 சதவிகிதம் குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டது.


பங்குச் சந்தை சரிவின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 6.98 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்- தனது சொத்து மதிப்பில் 9 சதவிகிதத்தை இழந்துள்ளார். இதேபோல், ஓரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், ​கூகுள் நிறுவனர்கள் லாரி பெய்ஜ், சர்ஜ பிரின், Sergey Brin டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோரும் கணிசமான அளவில் தங்களது சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்து 3,29,000 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம், பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading