கொரோனா அச்சத்தால் கர்நாடகா செல்ல பயணிகள் இல்லாமல் பேருந்துகள் தேக்கம்...!

”பேருந்துகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஓட்டுநர், நடத்துனர் கண்டிப்பாக  முக கவசம் அணி வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது”

கொரோனா அச்சத்தால் கர்நாடகா செல்ல பயணிகள் இல்லாமல் பேருந்துகள் தேக்கம்...!
பேருந்துகள் நிறுத்தம்
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சம் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகள் திரும்பி செல்ல போதுமான பயணிகள் இல்லாமல் இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது.  தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா அச்சம் தீவிரம் அடைந்துள்ளது. அதனால் மக்கள் வெளியில் வருவது குறைந்து விட்டது. இதனால்  கர்நாடகாவிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகள் திரும்பி செல்ல போதுமான பயணிகள் இல்லாமல் இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் ஒன்று, இரண்டு பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலிருந்து வரக்கூடிய, செல்லக்கூடிய பேருந்துகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஓட்டுநர், நடத்துனர் கண்டிப்பாக  முக கவசம் அணி வேண்டும் என்றும் கிருமி நாசினையை வைத்து சுத்தம் செய்த பின்னரே பேருந்துகளில் பயணிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading