கொரோனா தடுப்பு பணி, சிகிச்சைகளுக்காக இதுவரை ₹7605 கோடி செலவு - முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சம் உள்ள இந்த காலக்கட்டத்திலும் 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 • Share this:
  கொரோனா தடுப்பு பணி மற்றும் சிகிச்சைகளுக்காக இதுவரை 7605 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

  இந்தியாவிலேயே அதிக அளவு ஆய்வகங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர், தமிழகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமரே பாராட்டியதாகவும் தெரிவித்தார். கொரோனா அச்சம் உள்ள இந்த காலக்கட்டத்திலும் 61 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

  இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மகாத்மா காந்தி நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி தீண்டாமை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கு முன்னதாக மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  Published by:Vijay R
  First published: