சர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கங்கள்..!

சர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கங்கள்..!
கொரோனா (COVID 19)
  • News18
  • Last Updated: February 19, 2020, 6:21 AM IST
  • Share this:
கொரோனா பாதிப்பு உலகையே அதிரவைக்கும் நிலையில், இதன் காரணமாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

 

சுமார் 25 நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரசின் தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது. இது இந்தியா சீனா இடையே இருக்க கூடிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் எதிரொலித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 3.59 சதவிகிதம் குறைந்துள்ளது.


 

மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களில் 68 சதவிதம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. மருந்து தயாரிப்பாளர் பொதுவாக 2 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே இருப்பு வைத்திருப்பார்கள் என்ற நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால், மருந்துகளின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் மருந்து தயாரிப்பிற்கு, சுமார் 170 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதில் 68 சதவிதம் சீனாவில் இருந்து இறக்குமதியாகிறது.

 தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால், பாராசிடமால் மற்றும் வலி நிவாரண மருந்துகளின் விலை 30 முதல் 80 சதவிதம் வரை அதிகரித்துள்ளது.

தொலைக்காட்சிக்கு தேவையான உதிரி பாகங்கள் 75 சதவிதமும், செல்போன்களுக்கு தேவையான பாகங்கள் 85 சதவிதமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 60 ஆயிரத்து 219 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா வெளிநாடுகளில் இருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்கிறது, இதில் 37 சதவிதம் சீனாவில் இருந்து தான் இந்தியாவிற்கு வருகிறது.

இது போன்ற வைரசால் ஏற்படும் பாதிப்புகள், சர்வதேச சந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. உதாரணமாக 2002-2003ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது, சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் ஒரே மாதத்தில் 3. 4 சதவிதம் வரை சரிந்து, பின்னர் 6 மாதங்களில் 17.3 சதவிகிதம் வரை மீண்டு வந்தது. 2007ம் ஆண்டு சிகா வைரஸ் பாதிப்பு வந்த போதும் சர்வதேச சந்தைகள் ஒரே மாதத்தில், 5.3 சதவிதம் வரை சரிந்து, பின்னர் மீண்டு வர சுமார் 6 மாதங்கள் ஆனது. அதேபோல் 2014ம் ஆண்டில் எபோலா பாதிப்பு வந்த போது, சர்வதேச அளவில், 5 சதவிதம் வரை சந்தைகள் சரிந்து, பின்னர் 3 புள்ளி 8 சதவிதம் வரை மீண்டன.

 

கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனாவில் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை 25 சதவிதம் வரை சீனா குறைத்துள்ளது. இதனால் கடந்த 45 நாட்களில், கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவிதம் வரை சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில், 66.42 டாலராக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை பிப்ரவரி 11ம் தேதி 54.03 டாலராக குறைந்துள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல் விலையிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக சென்னையில், ஜனவரி 1ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 71 ரூபாய் 86 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் விலை 68 ரூபாய் 32 காசுகளாகவும் உள்ளது. கடந்த 45 நாட்களில் சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 3 ரூபாய் 47 காசுகளும் ஒரு லிட்டர் டீசல் 3 ரூபாய் 54 காசுகளும் குறைந்துள்ளது.

ஏற்கனவே வாகனங்களின் விற்பனை குறைந்துள்ள நிலையில், பிஎஸ் 6 வாகனங்களுக்கு தேவையான முக்கியமான உதிரி பாகங்களில் சுமார் 30 சதவிதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு உதிரி பாகம் இல்லை என்றாலும் அது வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்