Home /News /coronavirus-latest-news /

கொரோனா பரவல் எதிரொலி... பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு...!

கொரோனா பரவல் எதிரொலி... பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு...!

 பத்ம விருதுகள்

பத்ம விருதுகள்

இந்த விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று நோயை, பெரும் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய அரசும், கொரோனா வைரஸ் தொற்றைப் பேரிடர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மக்கள் அதிகமான அளவில் கூட்டம் சேர வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதை ஏற்று பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. மேலும்,கோயில்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக குடியுரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

    விருதுகள் வழங்கும் விழாவிற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

     

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Padma Awards, Padma Shri

    அடுத்த செய்தி