துரித பரிசோதனை உபகரணங்கள் மூலம் கொரோனா பரிசோதனை... தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்...!

துரித பரிசோதனை உபகரணங்கள் மூலம் கொரோனா பரிசோதனை... தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்...!
கோப்புப்படம்
  • Share this:
கொரோனாவை கண்டறியும் துரித பரிசோதனை உபகரணங்கள் தமிழகத்திற்கு இன்று வருகின்றன. நாளை முதல் இந்த உபகரணங்கள் மூலம் பரிசோதனை தொடங்கப்படுகின்றன.

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளன. தமிழகத்திற்கு இன்று வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெற முடியும். கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


துரித பரிசோதனை கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும்.

Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading