உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,500-ஐ நெருங்கியது!

”அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், யூரோவுக்கு இணையான டாலரின் மதிப்பு சரிந்துள்ளது”

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,500-ஐ நெருங்கியது!
கொரோனா வைரஸ்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,500ஐ நெருங்கி வரும் நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.


இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 725 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  தடுப்பு நடவடிக்கைகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என அம்மாகாண ஆளுநர், அதிபர் டிரம்புக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை ஒட்டிய தனது எல்லைப் பகுதிகளை இன்று காலை முதல் மூடுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,372 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக சொந்த ஊர் திரும்புமாறு, ஆஸ்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அயர்லாந்தும், ஸ்பெயினில் உள்ள குடிமக்கள் உடனே திரும்பி வருவதாக அறிவுறுத்தியுள்ளது.கத்தார் நாட்டில் வெளிநாட்டு விமானங்கள் மட்டுமின்றி, உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் - ஸ்பெயின் இடையிலான எல்லை ஒரு மாதத்திற்கு மூடப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், அதிபர் புதின் ஒரு புதிய குழுவை அமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், யூரோவுக்கு இணையான டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.

Also see...

அமெரிக்காவில் இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை! 45 இளைஞர்களுக்கு செலுத்தப்படுகிறது

அப்போதும்... இப்போதும்...! கொரோனா அச்சுறுத்தலால் களையிழந்த உலகப் புகழ் சுற்றுலா தலங்கள்
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading