இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114-ஆக உயர்வு!

24 மணிநேரத்தில் 40 பேர் குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114-ஆக உயர்வு!
கோப்புப் படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4421-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 274 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4421-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. டெல்லியில் 523 பேர், கேரளாவில் 327 பேர் தெலங்கானாவில் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா சிகிச்சைக்கு பிறகு 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இது 24 மணிநேரத்தில் 40 பேர் குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading