உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு 10,000-ஆக உயர்வு!

சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால், இதுவரையில் 3,248 பேர் உயிரிந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரஸால் , 3,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு 10,000-ஆக உயர்வு!
மாதிரிப் படம்
  • Share this:
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தை எட்டியுள்ளது.

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் 192 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால், இதுவரையில் 3,248 பேர் உயிரிந்துள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரஸால் , 3,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில், ஈரானில் 1,284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில் கொரோனா பாதிப்பால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,000-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Also see:
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்