உ.பி. காஜியாபாத்: கொரோனா சிகிச்சையில் கைகொடுக்கும் தமிழக அதிகாரியின் முயற்சி

உ.பி. காஜியாபாத். மாதிரிப்படம்.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கொரோனா ஆரம்பநிலைசிகிச்சைக்கான மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதில் அங்கு சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்ட தமிழரான சி.செந்தில் பாண்டியன் எடுத்துள்ள முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 • Share this:
  உ.பி.யில் லக்னோ மற்றும் காஜியாபாத்தில் கொரோனா தொற்று அதிகமாகஉள்ளது. இதை கட்டுப்படுத்த இவ்விரண்டு மாவட்டங்களிலும் தென் மாநிலங்களை சேர்ந்த உ.பி.யின் இரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக ஏப்ரல் 27-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்தார். தலைநகர் லக்னோவில் கேரளாவை சேர்ந்த ரோஷன்ஜேக்கப்பும் டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் தமிழரானசெந்தில் பாண்டியனும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

  மதுரையை சேர்ந்தசெந்தில் பாண்டியன் காஜியாபாத்தில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளார். இதன்படி, கொரோனா பரிசோதனைக்கு வருவோருக்கு ‘கரோனாகிட்’ எனும் பெயரில் ஆரம்பநிலை சிகிச்சைக்கான எட்டு வகை மருந்துகளை இலவசமாக அளிக்கின்றனர்.

  இதில், காய்ச்சல், தலைவலி, சளி ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் இரும்பு, வைட்டமின் சி உள்ளிட்ட சத்து மாத்திரைகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

  இந்தப் பணிக்காக அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாளேடு ஒன்றில் செந்தில் பாண்டியன் தெரிவித்தார்.

  மேலும், செயலிகள் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவன டெலிவரி ஆட்கள் மூலமாக அவர்கள் செல்லும் வீடுகளுக்கும் இதனை வழங்குகின்றனர். அறிகுறி இருப்பவர்கள் பயனடைய தினமும் சுமார் 5,000 கிட்களை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

  ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதால் மருத்துவமனைக்கு வராமலேயே கரோனாவை குணப்படுத்த முடிகிறது. இந்தமருந்துகளில் சில கடைகளிலும் கிடைக்காது என்பதால் எங்கள் கிட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  தொடக்க அறிகுறிகளை பொருட்படுத்தாமல் விடுவதால்தான் ஆக்சிஜன் தேவை அளவுக்கு கரோனா பாதித்து விடுகிறது. எங்கள் முயற்சியால் வரும் 15 நாட்களில் சுமார் 40 சதவீதம் வரை தொற்று குறையும் என நம்புகிறோம் என்கிறார் செந்தில் பாண்டியன்.
  Published by:Muthukumar
  First published: