தமிழகத்தில் மின் பயனீட்டாளர்கள் மார்ச் மாத மின்சாரக் கட்டணத்திற்கு கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாத கணக்கீட்டுத் தொகையை செலுத்துமாறு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மார்ச் மாதத்திற்கான மீட்டர் ரீடிங் எடுக்க முடியவில்லை என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. இவ்வாறு செலுத்தப்படும் மின்கட்டணத்தில் வேறுபாடு இருந்தால் அதற்கு அடுத்த மாத மின் கணக்கீட்டு கட்டணத்தில் சரிக்கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பணம் செலுத்த மின்கட்டண கவுன்டர்களுக்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ள டான்ஜெட்கோ, இணையதளங்கள் மூலமும், ஆன்லைன் பேங்கிங், பேமண்ட் கேட்வே, உள்ளிட்டவற்றின் மூலமும் கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.