• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 2000-ஐக் கடந்தது 

கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் கொரோனா தொற்று பாதிப்பு 2000-ஐக் கடந்தது 

கோப்புப் படம்

கோப்புப் படம்

ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களை தொடர்ந்து கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது

  • Share this:
தமிழகத்தில் ஜுன் 3ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 25,872 தொற்றுகளில், சென்னையில் 1,024 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8900 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 139 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 68 சதவிகிதம் ஆகும்.

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 143 பேரும், அண்ணாநகரில் 114 பேரும், கோடம்பாக்கம் 108 பேரும்,  திரு.வி.க.நகரில் 87 பேரும், தண்டையார்பேட்டையில் 86 பேரும், அடையாறு  58 பேரும், திருவொற்றியூரில் 51 பேரும், சோழிங்கநல்லூரில் 44 பேரும்,  அம்பத்தூரில் 32 பேரும், மாதவரத்தில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், வளசரவாக்கத்தில் 29 பேரும், பெருங்குடியில்  23 பேரும், ஆலந்தூரில் 18 பேரும், மணலியில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் - 3224

தண்டையார்பேட்டை -  2093

கோடம்பாக்கம் - 2029

தேனாம்பேட்டை -  2014

திரு.வி.க.நகர் - 1798

அண்ணா நகர் - 1525

அடையாறு -  1007

வளசரவாக்கம் - 939

அம்பத்தூர்-  651

திருவொற்றியூர் - 610

மாதவரம் - 431

சோழிங்கநல்லூர் - 306

பெருங்குடி - 301

மணலி - 246

ஆலந்தூர் - 261

ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை 3,224 ஆகவும், தண்டையார்பேட்டையில் 2,093 ஆக அதிகரித்துள்ள நிலையில், கோட்டம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டங்களிலும் தொற்று எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. அதேபோல், அடையாறிலும் பாதிப்பு எண்ணிக்கை 1007 ஆக அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் அதிக பாதிக்கப்படாமல் இருந்த சோழிங்கநல்லூர் மண்டலத்தில், நேற்று ஒரே நாளில் 44 பேருக்கும், திருவொற்றியூரில் 51 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.32 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.67 சதவிகிதத்தினரும், மூன்று திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

தலைமைச் செயலகத்தில் வேகமாக பரவும் தொற்று: ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: