Home /News /coronavirus-latest-news /

இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்தது

மாதிரி படம்

மாதிரி படம்

குணமடைவோர் விகிதம் 38.29 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு மூவாயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு மூவாயிரத்தைக் கடந்துள்ளது.

    மகாராஷ்டிராவில் பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், குஜராத்தில் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. டெல்லியில் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு 160-ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை எட்டியுள்ளது.

    ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 36,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 38.29 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி