• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பத்தாயிரத்தை நெருங்கியது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: எப்படி சமாளிக்கப்போகிறது சென்னை ?

பத்தாயிரத்தை நெருங்கியது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: எப்படி சமாளிக்கப்போகிறது சென்னை ?

கொரோனா

கொரோனா

சென்னையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் இம்மாத இறுதியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது

  • Share this:
சென்னையில் கடந்த 3 நாட்களாக  தொடர்ந்து 1000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 10,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 9,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, சென்னை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.மே மாத துவக்கத்தில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்கத்  துவங்க, மே இரண்டாவது வாரத்தில் இருந்தே அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் அனைத்தும் நிரம்பின. இதனால், கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருபவர்கள் பலரை, வீட்டுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டது.

படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக வீட்டில் தனி கழிப்பறை வசதி கொண்டவர்கள், வீட்டில் இருந்தபடியே மருத்துவ கண்காணிப்புடன் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மாநகராட்சி அறிவித்தது.

இந்நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் 1000-க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையை விட தொற்று பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்ப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் சிகிச்சையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் அரசு மருத்துவமனையில் மொத்தம் 4900 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக உள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் 4500 படுக்கைகளுக்கான வசதியும், இதைதவிர்த்து ஆரம்ப சுகாதார மையங்களில் 2960 படுக்கை வசதிகள் உள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு, அறிகுறி இல்லாதவர்களுக்கு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். நோய் தொற்று அதிகம் உள்ள 8 மண்டலங்களில் 3000 படுக்கை வசதிகளும், குறைவான பாதிப்பு உள்ள 7 மண்டங்களில் 1500 படுக்கைகளும் மாநகரட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால், அனைவராலும் அங்கு சென்று சிகிச்சை பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.சென்னையில் ஜூன் மாத இறுதியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கும் என எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அத்தைகைய சூழலில், சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளதா என்ற கேள்வியாக எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அரசு மருத்துவமனைகளில் 4900 படுக்கைகள் உள்ளன. அறிகுறியுடன் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறி உள்ளவர்கள் ஆரம்ப சுகாதரா மையங்களிலும் மற்றும் அறுகுறி இல்லாதவர்கள் அரசு முகாம்களில் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க 17000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது," என தெரிவித்தார்.

மேலும் படிக்க...

கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: