சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ நினைக்கிறீர்களா?

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ நினைக்கிறீர்களா?
கொரோனா
  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் இணையதளத்தின் வழியே விவரங்களை பதிவு செய்ய மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும், வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளர்களைக் கொண்டு வீடுகள் தோறும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளனவா என கணக்கெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பொது மக்கள் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மாநகராட்சி காப்பகங்களிலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மாநகராட்சியின் சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கபப்ட்டுள்ளனர். இவரகளுக்கு மாநகராட்சியின் சார்பில் உணவும் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகலில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் covid-19. Volunteers Registration & NGO's Registration என்ற இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உதவிப் பொருட்கள் மற்றும் தங்களால் வழங்கக் கூடிய பொருட்களின் விவரங்களை 044- 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக் கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறும் ஆணையர் கோ.பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.”இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆதரவற்றவர்களுக்கு உதவிட அரிசி, பருப்பு தாருங்கள்: சென்னை மாநகராட்சி அழைப்பு


First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்