• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Corona Karnataka : 3 ஆயிரம் கொரோனா நோயாளிகள் தலைமறைவு - கர்நாடக வருவாய் துறை அமைச்சர் பகீர் தகவல்

Corona Karnataka : 3 ஆயிரம் கொரோனா நோயாளிகள் தலைமறைவு - கர்நாடக வருவாய் துறை அமைச்சர் பகீர் தகவல்

கொரோனா

கொரோனா

தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான நோயாளிகள் தலைமறைவாகி இருப்பதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.

    வீட்டில் இருந்து வெளியேறிய அனைவரும் அவர்களது செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும், தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கொரோனா பரவலை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால் தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, திருப்பதியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,049 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக அவர்கள் அளித்த தொலைபேசி எண், முகவரி ஆகியவை போலியானது என தெரியவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: