நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்குக்கு பரிந்துரை

ஊரடங்கு

இந்தியா முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  ஏற்கெனவே, மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும், திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கர்நாடகாவிலும் 14 நாள்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

  அந்தக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் கூடுதலாக உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பரவல் சங்கிலியை முறிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு கொண்டுவரும் பட்சத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைதான் இறுதி முடிவு எடுக்கும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: