ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா விதிமீறல் : தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூல்

கொரோனா விதிமீறல் : தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூல்

கொரோனா விதிமீறல் : தமிழகம் முழுவதும் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூல்

கொரோனா விதிமீறல் : தமிழகம் முழுவதும் 2.78 கோடி ரூபாய் அபராதம் வசூல்

முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம், தனிமைபடுத்துதலை மீறினால் 500 ரூபாய், தனி மனித இடைவெளியை கடைபிடிக்கமல் இருந்தால் 500 அபராதம், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றாத வணிக வளாகத்திற்கு 5000 ரூபாய் அபராதம் என  வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கடந்த மூன்று தினங்களாக முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது சென்னை போலிசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ரசீது புத்தகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் எண்ணிக்கை 1,30,531. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூபாய் 2,52,34,900. இவற்றுள் தெற்கு காவல் மண்டலத்தில் தான் அதிக அளவில் முகக்கவச அணியாத காரணத்துக்காக வழக்குகள் பதியப்பட்டு, அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 16336 வழக்குகள் பதியப்பட்டு அவற்றின் மூலம் ரூ.85,74,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாத காரணத்துக்காக குறைவான வழக்குகள் பதியப்பட்டு குறைவான அபராத தொகையை வசூலித்ததாக மேற்கு மண்டலம் திகழ்கிறது. 6858 வழக்கு பதிவுகளும் அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையானது ரூ.43,40,000.

அதேபோல் தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது கடந்த4 நாட்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 6465. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை 25,90,000. இவற்றுள் நேற்று ஒரு நாளில் (11-04-2021) மட்டும் தமிழகம் முழுவதும் முக கவசம் அணியாத வழக்குகள் 46,062. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகைதொகை ரூ89,61,300. அதேபோல சமூக இடைவெளி வழக்குகள் 1,796. அதன்மூலம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 8,51,800.

மேலும் படிக்க... திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை.... திமுக நிர்வாகி கைது

அதேபோல சென்னையில் கடந்த 8ந்தேதி முதல் நேற்று மாலை வரையிலான 4 நாட்களில் முகக்கவசம் அணியாதோர்கள் 2351 மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 4,44,600 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என்கிற அடிப்படையில் 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.59, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடைமுறைகள், முக கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியின் அவசியம் பற்றி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona spread, CoronaVirus, Tamil Nadu