• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • 29 நாடுகளுக்கு பரவிய புதிய கொரோனா திரிபு "லாம்ப்டா" : எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்?

29 நாடுகளுக்கு பரவிய புதிய கொரோனா திரிபு "லாம்ப்டா" : எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா திரிபானா லாம்ப்டா வைரஸ் பாதிப்பு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

  • Share this:
    உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது ‘வேரியண்ட் ஆப் இன்ட்ரஸ்ட்’ பட்டியலில் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் திரிபு ஒன்றை சேர்த்துள்ளது.

    இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்த உருமாற்ற வைரஸின் பெயர் ‘லாம்ப்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்தே, இந்த திரிபு உலகம் முழுவதும் 29-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால், இந்த கொரோனா திரிபை உலகளாவிய மாறுபாடாக கடந்த ஜூன் 14ம் தேதி WHO வகைப்படுத்தியது. இந்த புதிய மாறுபாட்டைப் பற்றிய கவலை மக்களின் மனதில் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:

    "லாம்ப்டா" மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகள்:

    செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, பெருவில் 'லாம்ப்டா' மாறுபாடு மிகவும் பரவலாக இருந்தது. அதாவது கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த COVID-19 பாதிப்புகளில் 81 சதவீத மக்கள் லாம்ப்டா மாறுபட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த மாறுபாட்டின் பாதிப்பு உலகின் 29 நாடுகளில் இப்போது பதிவாகியுள்ளது. வைரஸ் பெரும்பாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளை பாதித்துள்ளது. சிலியில், கடந்த 60 நாட்களில் 32 சதவீத பாதிப்புகளுக்கு கொரோனாவின் லாம்ப்டா மாறுபாடு காரணமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளும் இந்த புதிய மாறுபாட்டின் அதிகரித்த பாதிப்பை பதிவு செய்துள்ளன.

    வேரியண்ட் ஆப் இன்ட்ரெஸ்ட் என்றால் என்ன?

    COVID-19-ன் பல வகைகளை இரண்டு பரந்த பிரிவுகளாக WHO வகைப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று வேரியண்ட் ஆப் இன்ட்ரெஸ்ட் (Variant of interest) மற்றொன்று வேரியண்ட் ஆப் கன்சர்ன் (variants of concern) ஆகும். ‘கன்சர்ன்’ (கொரோனா குறித்த கவலை) பட்டியலில் குறிக்கப்பட்ட வைரஸ் விகாரங்கள் தொற்றுநோயியல் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. பிற பட்டியலில் சேர்க்கப்பட்ட மாறுபாடுகளுக்கு இன்னும் அந்த திறன் இல்லை. இந்த நிலையில் வேரியண்ட் ஆப் இன்டெரெஸ்ட் பட்டியலில் லாம்ப்டாவை வகைப்படுத்திய பிறகு, அதன் பரவுதல் தன்மை மற்றும் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளுக்கு எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக WHO தெரிவித்துள்ளது. இது கன்சர்ன் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை WHO பின்னர் தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுவரை கிடைத்த வரையறுக்கப்பட்ட தரவுகளின்படி, ‘லாம்ப்டா’ மாறுபாடு பரவுதலை அதிகரிக்கும் அல்லது ஆன்டிபாடிகளுக்கு எதிராக வைரஸின் தாக்கத்தை வலுப்படுத்தும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எந்தவொரு முடிவையும் உறுதி செய்ய ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. மேலும் புதிய வைரஸ் திரிபு பற்றி மேலும் புரிந்துகொள்ள புதிய ஆய்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வேரியண்ட் ஆப் இன்ட்ரெஸ்ட்டின் மிக சமீபத்திய எடுத்துக்காட்டு எதுவென்றால் மே 11ம் தேதி வரை இந்த பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்ட டெல்டா மாறுபாடு ஆகும். இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் திரிபு இப்போது கவலைக்குரிய மாறுபாடாக (வேரியண்ட் ஆப் கன்சர்ன்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    வேரியண்ட் ஆப் கன்சர்ன் பட்டியலில் சேர்க்கப்பட்ட கொரோனா திரிபு என்னென்ன:

    டெல்டா மாறுபாடு (B.1.617.2) தவிர, WHO இன் கன்சர்ன் பட்டியலில் சேர்க்கப்பட்ட வைரஸ் திரிபு B.1.1.7 (ஆல்பா), B.1.351 (பீட்டா), P.1 (காமா), B.1.427 ( எப்சிலன்), மற்றும் பி .1.429 (எப்சிலன்) ஆகியவை ஆகும். விரைவில், இன்டெரெஸ்ட் பட்டியலில் இருந்து கன்சர்ன் பட்டியலுக்கு லாம்ப்டாவும் மாற்றப்படலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: