கொரோனா அச்சுறுத்தல்: உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3600-ஆக உயர்வு!

ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3600-ஆக உயர்வு!
கோப்பு படம்
  • Share this:
இத்தாலியில் நேற்று ஒரே தினத்தில் 133 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 7000-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரு நாளில் 133 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 366 ஆக உயர்ந்திருக்கிறது. 7,375 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, பள்ளி, சொகுசு விடுதி உள்ளிட்டவைகளை ஏப்ரல் 3 வரை மூடுமாறு பிரதமர் குய்சேப்பே காண்டே உத்தரவிட்டுள்ளார். இத்தாலியின் துரித செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.


சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

சீனா, இத்தாலியை அடுத்து, வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை தென் கொரியாவிலேயே அதிகமாக உள்ளது. அந்நாட்டில் 7,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் நாட்டில் 1566 பேர் பாதிக்கப்பட்டதுடன், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் 1000 பேருக்கு மேல் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்தார்.அமெரிக்காவில் 470 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் நகரவாசிகளுக்கு அத்தியாவசியமற்ற விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாகாண மேயர் பில் பிளாசியோ அறிவித்தார்.

இதனிடையே, எகிப்தின் நைல் நதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் 33 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 17 பேர் இருப்பதும் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், 24 மணிநேரத்துக்குள் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொலம்பியா, பல்கேரியா, கோஸ்டா ரிகா, மால்டா, மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also see...

 
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading