கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பங்கேற்றார்.
இதன்பின்செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா காலத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு நடவடிக்கை பற்றி எடுத்துரைத்தார்..
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டவுடன் தமிழக அரசு தங்கள் செலவில் இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் என்று தெரிவித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இன்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்