corona vaccine | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 3 மாதத்துக்குப் பின் தடுப்பூசி

தடுப்பூசி.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, மூன்று மாதங்களுக்கு பின், தடுப்பூசி போடப்பட வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    இது ஒரு பெரிய கேள்வியாக இருந்து வந்தது. கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எப்போது தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது இந்நிலையில் நிபுணர்கள் குழு அன்று கொரோனா பாதித்தவர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரை மேற்கொண்டது.

    இது மிகவும் நீண்ட ஒரு இடைவெளி இதற்கிடையில் கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் தொற்று தாக்காது என்பது என்ன நிச்சயம் போன்ற கேள்விகள் இருந்துவந்தன. மேலும் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை வேறு, மிதமான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை சற்றே வேறுபட்டது. இருவருமே 6 மாதம் கழித்து வாக்சின் போட்டுக்கொள்வதா என்ற சந்தேகமெல்லாம் இருந்தது.

    அதாவது தீவிர கொரோனா நோயாளிகள் அதாவது மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைதல், இதனால் ஆக்சிஜன் வைக்க வேண்டிய தேவை உள்ளவர்கள், இருமல் உள்ள தீவிர கோவிட் நிமோனியா நோயாளிகள், வெண்ட்டிலேட்டரிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள் என்று கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் பலரகம்,  மற்றும் இணை நோய்கள் இருக்கும் கொரோனா நோய் பீடித்தவர்களுக்கும் கடுமையான ஆண்டிபயாடிக்குகள், ஸ்டீராய்ட் போன்றவை நரம்பு வழியாக ஏற்றப்படும். அவர்களுக்கும் திடமான உணவு இறங்காததால் டெக்ஸ்ட்ரோஸும் ஏற்றப்படும். இத்தகையவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காலக்கட்டத்தில் காலையில் ஒரு ஊசி, இரவில் ஒரு ஊசி என்று தினமும் போடப்படும். இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவிலிருந்து குணமடையும் போது 6 மாதம் கழித்து வாக்சின் எடுத்துக் கொள்ளலாமா அல்லது சாதாரண, மிதமான கொரோனா பாதித்து மீண்டவர்களும் 6 மாதம் சென்று வாக்சின் போட்டிக் கொண்டால் போதுமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருந்தன.

    இதற்கு பதில் அளிக்குமாறு தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, குணமடைந்தோருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர் குழு தெரிவித்த பரிந்துரைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    இது பற்றி, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குணமடைந்தோருக்கு, மூன்று மாதங்களுக்கு பின், தடுப்பூசி போடலாம். முதல், 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், குணமடைந்து, மூன்று மாதங்களுக்குப் பின், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடலாம். மேலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு, ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது தொடர்பான பரிந்துரைகளை அக்குழு அளிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: