கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயனடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.