மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் வேளையில் மே மாதத்தில் மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1.29 கோடி கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன, இதில் 22 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 4ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நாடு முழுதும் 7.4 கோடி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டன. இதில் 1.85 கோடி தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பயன்படுத்தாத தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ளன.
1.85 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டதில் தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசிகளைப் பெற்றன. இதில் ஆகக்குறைவாக 22 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன, என்று அரசு வெளியீடே கூறுகிறது.
Also Read: திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர்.. அடித்துக்கொன்ற முன்னாள் காதலி - பரபரப்பு வாக்குமூலம்
தடுப்பூசி போட்டுக்கொள்ள நிலவும் தயக்கமும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலையும் குறைவான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“25% டோஸ்கள் தனியார் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டதாகவும் அது 7.5% தான் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன” என்று அரசு செய்தி அறிக்கை கூறுகிறது.
Also Read:
கொரோனா மாதா: உ.பி. கிராமத்தில் மரத்தடியில் சிலை அமைத்தவர் கைது
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை டோஸ் ஒன்றிற்கு ரூ.780- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வாக்சின் ரூ.1,145 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின் ஒரு டோஸ் விலை ரூ.1410. இதில் வரிகள் உள்ளடங்கும் , மேலும் மருத்துவமனை சேவைக் கட்டணம் ரூ.150ம் அடங்கும்.
ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று நடைமுறைக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த புதிய தடுப்பூசிக் கொள்கையின் படி மத்திய அரசு 75% தடுப்பூசிகளை நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.