Home /News /coronavirus-latest-news /

திங்கள் முதல் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் - விரைவில் பெருந்தொற்று ஒழிக்கப்படும் என ட்ரம்ப் நம்பிக்கை

திங்கள் முதல் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் - விரைவில் பெருந்தொற்று ஒழிக்கப்படும் என ட்ரம்ப் நம்பிக்கை

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசி பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவன தடுப்பூசிகள் 95 சதவீதம் பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கனடா, பஹ்ரைன், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

    இதனை நாட்டு மக்களுக்கு அறிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப், 24 மணிநேரத்துக்குள் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று கூறினார். அமெரிக்கர்கள் அனைவர்களுக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், 9 மாதங்களில் பலனுள்ள தடுப்பூசியை விநியோகித்து மருத்துவ அதிசயத்தை நிகழ்த்தியுள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.

     

    முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் தடுப்பூசி போடப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், திங்கட்கிழமையே பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் 30 லட்சம் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே, உலகம் முழுவதும் தேவைப்படும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க 32 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச சமூகம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் “ நான் உண்மையில் மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன். நமது நாடு மருத்துவ அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது. வெறும் 9 மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்தை விநியோகிக்கிறோம். வரலாற்றில் இது மிகப்பெரும் அறிவியல்பூர்வ சாதனை. இது கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும். விரைவில் பெருந்தொற்று முழுமையாக ஒழிக்கப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: America, Corona, Donald Trump, Medicine

    அடுத்த செய்தி