Covid-19 Vaccines | இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் எட்டு தடுப்பூசிகள் என்னென்ன?

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்தும் என்று உலகச் சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் உலகம் முழுதும் வலியுறுத்தும் நிலையில் இந்தியாவுக்கு பயன்பாட்டுக்கு வருகிறது 8 தடுப்பூசிகள்.

  • Share this:
    இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது, “நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.

    என்னென்ன தடுப்பூசிகள்?:

    கோவிஷீல்ட், கோவேக்சின், பயலாஜிக்கல் இ, ஜைடஸ் கெடிலா டிஎன்ஏ, நோவோவேக்ஸ், மூக்கு வழி செலுத்தும் பி.பி. தடுப்பூசி, ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ., ரஷ்யாவின் ஸ்புட்னிக்.

    கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆய்வுகளின்படி இந்தத்தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது.

    கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்கி வருகிறது. இதன் செயல்திறன் 81 சதவீதம். இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது இது சுமார் 600க்கும் மேற்பட்ட கொரோனா ஸ்ட்ரெய்னுக்கு எதிராகச் செயல்படுவதாக அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இது கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள 3-வது தடுப்பூசி ஆகும். ஆரம்பத்தில் இறக்குமதி செய்தாலும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது, இதன் விலை டோஸ் ஒன்றுக்கு ரூ.995.

    நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என்றிருக்கும். இது 96.4 சதவீத செயல்திறன் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

    மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்குகிறது. இது தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது.

    பயாலஜிக்கல் இ தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசியை ஆமதாபாத்தின் ஜைடஸ் கேடிலா நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இதன் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

    ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இது மனிதர்களுக்கு செலுத்தி இனிதான் பரிசோதிக்கப்படவேண்டும்.
    Published by:Muthukumar
    First published: