கோவேக்சின் மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனாவை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனையின், இரண்டாம் நிலையை அடைந்துள்ளது. சோதனையின் போது மருந்து செலுத்தப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும் உறுதியாகியுள்ளது.

கோவேக்சின் மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 9, 2020, 8:08 PM IST
  • Share this:
கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க இந்தியா தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசி, முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சோதனையின் இரண்டாம் கட்ட நிலையை கடக்க உள்ளது. கடந்த ஜூலை 23-ம் தேதி பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து விலங்குகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், குரங்குக்கு கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டு இருந்தது உறுதியானது.

இதை தொடர்ந்து தடுப்பூசி சோதனைக்காக இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன, தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.


நாடு முழுவதும் முதற்கட்ட சோதனையில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 750 பேர், 28 நாட்கள் கடந்தும் நலமுடன் இருந்ததை அடுத்து, இரண்டாம் கட்ட சோதனை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது.



12 வயது முதல் 65 வயதுடைய 30 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டாம் கட்ட சோதனையை தொடங்கி 28 நாட்கள் ஆன நிலையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

மேலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்த தடுப்பூசி போடப்பட்டவர்கள் 42 வது நாள், 56 வது நாள், 118 வது நாள் என 206 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். மொத்தம் மூன்று கட்டங்களாக மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading