கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்ய, சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பலகட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவீஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை, அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்ய, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, மத்திய அரசுடன் 40 கோடி தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகள் 200 ரூபாய் எனும் சிறப்பு விலையில வழங்கப்படும் என்றும் கூறினார்.
அதேசமயம், தனியார் சந்தைகளில் ஒரு தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என்றார். சில மாதங்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், அரசுடனான ஒப்பந்தம் இறுதி ஆனதும் 7 முதல் 10 நாட்களுக்குள் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் எனவும் பூனவல்லா கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.