இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் 100ஆவது நாளை எட்டியது : 14 கோடி போர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலாவதாக சுகாதார ஊழியர்களுக்கும், 2ஆவதாக முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டது. பின்னர், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இன்று 100ஆவது நானை எட்டியுள்ளது. இதுவரை 14,9,16,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே மிக விரைவாக தடுப்பூசி போட்டதில் இந்தியா முன்னணியில் இருக்கின்றது.

  இந்நிலையில், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் திட்டம் மே 1ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையல், இதற்கான மருந்துகளை 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வழங்க இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு இந்த நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் 200 ரூபாயில் இருந்து 250 ரூபாய்க்கு வழங்கின. அவற்றை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவச தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

  இந்நிலையில், இரு நிறுவனங்களும் மருந்து விலையை உயர்த்தி இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், கோவிஷீல்டு நிறுவனம் மருந்து விலையை அதிகரிப்பதாக கூறியது. இதன்படி ஒரு டோஸ் மருந்து மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் விலையிலும், தனியாருக்கு 600 ரூபாய் விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

  அதனைத் தொடர்ந்து, கோவேக்சின் மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒரு டோஸ் தடுப்பூசி மாநில அரசுக்கு 600 ரூபாய்க்கும், தனியாருக்கு 1,200 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தி இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லை. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

  இந்நிலையில், மருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன. அதுவும் கோவிஷீல்டு நிறுவனம் 400 ரூபாய், 600 ரூபாய் என விலையை நிர்ணயித்தது. ஆனால் கோவேக்சின் நிறுவனம் 600 ரூபாய், 1,200 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

  Must Read :  கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் - மான்கி பாத்தில் மோடி வேண்டுகோள்

   

  அந்த நிறுவனங்கள் லாபம் காண்பதற்கு மத்திய அரசு உதவுகிறது. மத்திய அரசு அத்தியாவசிய சட்டத்தை பயன்படுத்தி குறைவான விலைக்கு விற்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: