மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்

மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்

ஆட்டோவில் சிகிச்சை

கர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவதனை முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

 • Share this:
  கர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவதனை முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  கர்நாடகா மாநிலத்தில் கொரோனா 2ஆவது அலை பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.

  இந்நிலையில், கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான் பெண் ஒருவர் சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதேபோல மற்ற அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

  இதனால் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

  நாடு முழுவதும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரு நாளில் 2,61,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கொரோனா சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை காணப்படாத உச்சமாகும். நாட்டில் இதுவரை 1,47,88,109 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Must Read :  அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..

   

  இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததால், ரயில் பெட்டிகளை மருத்துவ மனைகளாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

  அதேபோல ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும் பல்வவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: