கொரோனா தொற்று காலம்: மூத்த குடிமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..

நாட்பட்ட சுவாச நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதுடன், சரியான அளவிலான சரிவிகித ஆரோக்கிய உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

கொரோனா தொற்று காலம்: மூத்த குடிமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..
மூத்த குடிமக்களுக்கான வழிகாட்டல்கள்
  • Share this:
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து மக்களைக் காக்கவும், தொற்று ஏற்பட்டால் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய முறைகளை, பொதுமக்கள் நலன் கருதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவை என்னென்னவென்று விரிவாகத் தெரிந்துகொள்ளவும். இந்த நோய்க்காலத்தை வெற்றிகரமாக கடக்க வாழ்த்துக்கள்.

கொரோனா நோய்த்தொற்று காலங்களில் மூத்த குடிமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:

மூத்த குடிமக்களுக்கான அரசின் வழிகாட்டல்கள்1. முகக்கவசம் அணிந்து முடிந்தவரை வீட்டிலிருந்து வெளியில் செல்லாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

2. நாட்பட்ட சுவாச நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதுடன், சரியான அளவிலான சரிவிகித ஆரோக்கிய உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

3. திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.4. நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

5. கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான மனநலம் பேணுவதற்கான வழிமுறைகள்:-

1. தனிமைப்படுத்துவது ஒதுக்குவது அல்ல. அது உங்களின் பாதுகாப்புக்கும், குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் செய்யப்படும் தற்காலிக நடைமுறை.

2. தியானம், யோகா, உடற்பயிற்சி, இசை கேட்பது ஆகியவை அழுத்தத்தைக் குறைக்கும்.

3. மனச்சோர்வு, பேச முடியாத உணர்வு, மனநோய் இருந்தால் 08046110007 என்னும் எண்ணை தொடர்புகொள்ளவும்.

4. இணையதளத்தில், தொலைக்காட்சியில் மனதிற்கு அழுத்தம் தரும் எதையும் பார்க்கவேண்டாம்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading