• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லியைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் உறுதி செய்யப்படும் கொரோனா தொற்றுகளில் சுமார் 45 விழுக்காடு தொற்றுகள் தென் மாநிலங்களிலேயே காணப்படுகிறது.

    திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளாவில் 22,153 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் திங்கட்கிழமை ஒரே நாளில் கண்டறியப்பட்ட தொற்றுகளில் 46.43 விழுக்காடு ஆகும்.

    திங்கட்கிழமை ஒரே நாளில் ஆந்திராவில் 6,051 தொற்றுகளும், கர்நாடகாவில் 5,324 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருமாநிலங்கலும் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. ஆந்திராவில் உயிரிழப்பு 1,090 ஆகவும், கர்நாடகாவில் உயிரிழப்பு 1,953 ஆகவும் அதிகரித்துள்ளது.

    Also read: ரேஷன் கடையில் மலிவு விலையில் தரப்பட்ட மளிகைப் பொருட்கள் தேக்கம் - காரணம் என்ன?

    இதையடுத்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களில், 3 மாநிலங்கள் தென்மாநிலங்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளில் கிழக்கு கோதாவரி, குர்னூல், குண்டூர், அனந்தபூர் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மட்டுமே 55 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிப்பு எண்ணிக்கையில் தேசிய அளவில் 4வது இடத்தில் இருக்கும் ஆந்திரா, உயிரிழப்பு எண்ணிக்கையில் 7வது இடத்தில் உள்ளது.

    ஒரு லட்சம் பாதிப்புகளை கடந்து தேசிய அளவில் 5வது இடத்தில் இருக்கும் கர்நாடகா, சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் தொற்று பரவல் தொடக்கத்தில் மெதுவாகவே காணப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் பரவும் வேகம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகா முதல் 50,000 தொற்றுகளை கடக்க 128 நாட்கள் ஆன நிலையில், 50,000-த்தில் இருந்து ஒரு லட்சமாக அதிகரிக்க 11 நாட்களே ஆகியுள்ளன.

    இந்தியாவில் இறப்பு விகிதம் ஜூன் மாதத்தில் 3.36 சதவிகிதமாகவும், ஜூலையில் 2.35 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. இறப்பு விகிதம் உலக அளவில் 10 லட்சத்துக்கு 79.7 சதவிகிதமாக உள்ளது. இது இந்தியாவில் 20.82 விழுக்காடாக உள்ளது. ஜூன் மாதத்தில் 19 நாள்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிபானது. இதுவே ஜூலை மாதத்தில் 21 நாள்கள் ஆனது. ஜூன் மாதத்தில் குணமடைவோர் விகிதம் 58.13 சதவிகிதமாகவும் ஜூலையில் 63.12 விழுக்காடாகவும் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: