கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. காரணம் என்ன?ஆசியாவிலே மிகப்பெரிய காய்கறி விற்பனை நிலையம் கோயம்பேடு காய்கறி சந்தை. இந்த சந்தையின் மூலமாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சந்தை தற்காலிகமாக மே 5 ஆம் தேதி மூடப்பட்டது .
ஐந்து மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் படி படியாக கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொற்று ஒரே நாளில் 50 பேருக்கு பரவவில்லை என்றும் ஒரு நாளில் ஒருவர் இருவருக்கு மட்டுமே தொற்று பரவுதாகவும் அதும் வெளி நபர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காய்கறி சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.
2,000 கடைகள் கொண்ட காய்கறி கடைகளில் தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களால் 200 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படிபடியாக மட்டுமே இரண்டு நுழைவுவாயில்கள் வழியாக வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் கூட்டம் அதிகமாகி தொற்று பரவ வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். சில்லரை வியாபாரம் தொடங்க வேண்டும். நுழைவு வாயில்களை அதிகளவு திறந்தால்தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று இங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் முகக் கவசங்கள் அணிதல் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினாலே பரவல் கட்டுப்படுத்த முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.