தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3289 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்று பாதித்து 49,985 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2482 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6984 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்து. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் 2482 பேருக்கும் செங்கல்பட்டில் 771 பேருக்கும் கோவையில் 504 பேருக்கும் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,47,129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கொரோனா சிகி்ச்சை முடிந்து 3289 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,84,199 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலைியில் மொத்த உயிரிழப்பு 12945 ஆக உள்ளது.
    Published by:Vijay R
    First published: